உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
35 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட பிரதான வீதி! மகிழ்ச்சியில் மக்கள்

இந்த வீதி அச்சுவேலி இலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கிறது. அதன் திறப்பு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும் இந்த புதிய வழியினால் பயணிக்கும்போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
வீதி குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள்:
-
வீதி திறக்கப்படும் நேரம் காலை 6.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை மட்டுமே.
-
வாகனங்களின் இயக்கம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் இடையில் நிறுத்துதல் அல்லது திருப்புதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
-
புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் அல்லது ஒளிப்பதிவு செய்ய தடை.
-
நடையில் பயணங்கள் இந்த வீதியில் நடைபயணம் செய்யத் தடை.
-
பேருந்துகள் இந்த வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர வேறு எந்த பாரவூர்திகள் பயணிக்காது.
-
வேக கட்டுப்பாடு இந்த வீதியில் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் 40 கி.மீ/மணி.
-
இந்த வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகள் மற்றும் பயணிகளும் அடையாள அட்டைகள் அல்லது உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
மேற்கூறிய அறிவுறுத்தல்களை மீறுதல் குற்றமாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.