உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர், ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்டப் பகுதியில் கவிழ்ந்ததில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்தில், பவுசரில் இருந்த 13,800 லீற்றர் பெட்ரோல் மற்றும் 13,200 லீற்றர் டீசல் வீதியிலும், நீர் ஆதாரங்களிலும் கசியியுள்ளது. இந்த எரிபொருள், அந்த பகுதியில் ஏற்பட்ட மழையுடன் கலைந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கும், அருகிலுள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குடிநீர் பகுதிகளிலும் கலந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பவுசர் கவிழ்ந்ததையடுத்து, எரிபொருள் கசியும் நிலையில் இருந்தபோதும் சில பிரதேசவாசிகள் எரிபொருளை எடுத்துச் சென்றதையும் சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும், கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீதமிருந்த எரிபொருளை மற்றொரு பவுசர் வாகனத்தின் உதவியுடன் அகற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் குடிநீர் பாதிப்பு தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.