உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை

1990களில் இடம்பெற்றதாக கூறப்படும் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவல் மற்றும் செயல்படுத்தல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி சட்டமா அதிபரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் தற்போது இதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் திகதி, குறித்த ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் உறுதி செய்துள்ளது.
அறிக்கையின் உள்ளடக்கங்களில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை சம்பவங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சாத்தியமான வழக்குத் தொடர்ச்சி குறித்த பரிந்துரைகளை சட்டமா அதிபர் திணைக்களம் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.