உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் செயல்படவுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தினை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் இன்று பார்வையிட்டார்.
அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனுடன் இணைந்து நடைபெற்ற இந்த பார்வையின் போது, தற்போதைய கட்டிட அபிவிருத்தி மற்றும் ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் நேரடியாக பரிசீலனை செய்தார்.
இத்தருணத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைகளின் முன்னேற்ற நிலை குறித்து, அரசாங்க அதிபர் மூலம் அமைச்சர் சந்திரசேகர் தெளிவுபடுத்திக் கொண்டார்.
மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் காத்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அரசாங்க அதிபர், அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பொதுமக்களுக்கு விரைவான மற்றும் எளிமையான சேவையளிக்கும் நோக்கத்தில், யாழ்ப்பாணத்தில் இவ்வகை கடவுச்சீட்டு அலுவலகம் நிறுவப்படுவது மகத்தான முன்னேற்றமாகும் என பார்வையின்போது அமைச்சர் குறிப்பிட்டார்.