உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை வந்தார் போலந்து அமைச்சர்

போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28) இலங்கைக்கு வந்தடைந்தார்.
அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ வரவேற்றுள்ளார்.
அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று பிற்பகல் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் உட்பட உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.