உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு ; வெளியான அதிர்ச்சி காரணம்

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது ஏப்ரல் 18ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், தேவாலயத்தின் மதபோதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் தேவாலயத்தின் யன்னல்கள் சேதமடைந்துள்ளன. சம்பவத்தின் போது தேவாலயத்தில் எவரும் இல்லாததால் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அவர் மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.