உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இன்று (10) பதிலளிக்கும் போதே, ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். தற்போது, ஏப்ரல் 15ஆம் திகதி தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்வரும் 18ஆம் திகதி பெரிய வெள்ளி என்பதால், அந்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
அதன் அடிப்படையில், ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என்றும், அரசாங்கம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.