உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் மூடப்பட்ட முக்கிய வீதிகள் ; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு

இந்தியப் பிரதமரின் இலங்கை வருகையையொட்டி, கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்ல அபேகம பகுதியிலுள்ள வீதிகள் பல சந்தர்ப்பங்களில் மூடப்படும் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், போக்குவரத்து நெரிசல் மற்றும் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக, சாரதிகளை மாற்றுப் பாதைகளுக்கு வழிநடத்துமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.