உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரின் செயலால் பயணிகள் கடும் விசனம்

அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவைக்கு புறப்படும் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கிளிநொச்சி இ.போ.ச (இலங்கை போக்குவரத்துச் சபை) பேருந்துகள் செயல்படும் முறையால் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளின் கூறுகையில்,வட்டக்கச்சி செல்லும் பேருந்து, அதன் பெயர்பலகையை மறைவாக வைத்திருப்பதுடன், அக்கரைப்பற்று என்ற தவறான பெயர்பலகையை பயன்படுத்தி பயணிகளை ஏற்றுகிறது.இப்பேருந்துகள் மிகவும் மெதுவாக நகர்வதால், A-9 வீதியிலுள்ள பயணிகள் வவுனியா மற்றும் பிற இடங்களுக்கு செல்வதற்காக விரைந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இது, அந்தப் பயணிகளை தங்களுக்கு தேவையான இடத்துக்கு செல்லாமல், பேருந்து டிப்போவுக்கே வருமானம் சேர்க்கும் வகையில் செயல்படுகிறது என்ற ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.
பயணிகள் மேலும் தெரிவிக்கையில்,”தாமதமாகவே அலுவலகத்திற்கு செல்வதால், எங்களால் நேரடியாகவே இல்லாமல் விடுப்பில் பங்கை இழக்க நேரிடுகிறது. இது தொடர்ந்து நடப்பதால் வேலைக்கான நிலைமை பாதிக்கப்படுகிறது.”
சாரதி மற்றும் நடத்துனரின் செயல் முறைகள் குறித்து தெளிவான விசாரணை நடத்த வேண்டுமெனவும், அரச போக்குவரத்துத் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.