உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பெற்றோரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை பலி
புத்தளம், ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியான சம்பமொன்று நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வைரம்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 1 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.