உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழிலிருந்து தென்னிலங்கை சென்ற சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து மீது, இன்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல் நடத்தினர்.
வேலணை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்து ஒரு மோட்டார் சைக்கிளை முந்த முயற்சித்தபோது, இடம் தரப்படவில்லை என்ற காரணத்தால், மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பேருந்து சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அவர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் பேருந்து சாரதி யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.