உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் மீது முறைப்பாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குமீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தில் பல மோசடிகள் நடைபெறுவதாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் முக்கிய அம்சங்கள் மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் நடந்து கொள்கின்றனர்.பல்கலைக்கழக நிர்வாகம், இந்த விதி மீறல்கள் தொடர்பாக பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது.
கடந்த மாதம் 29ஆம் திகதி, நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் குடிபோதையில் விடுதியொன்றில் அனுமதி பெறாமல் தங்கி இருந்தார். இது தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் முறைப்பாடு செய்தனர்.ஆனால்முறைப்பாடு செய்த மாணவர்கள் உட்பட, விடுதியிலிருந்த மற்ற மாணவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இரவு நேரத்தில் வேறு விடுதியிற்கு அழைத்து சென்றனர்.ஒரு அறையில் பூட்டி வைத்து, பொய்யான வாக்குமூலங்களில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக அழுத்தப் போடப்பட்டது.மாணவர்களின் சம்மதமின்றி காணொளி மூலம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன.
விசாரணைகளை நடாத்த உத்தியோகபூர்வ விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்களே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.விசாரணை முறைகள் சட்டத்துக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கைகள் பற்றி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், திரும்பத் திரும்ப முறைப்பாடு செய்த மாணவர்களுக்கே எதிராக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.