உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
உயிருக்கு போராடிய வெளிநாட்டு பிரஜைகளை காப்பாற்றிய வீரர்கள்!
காலி, ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரிகம கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 25, 27 மற்றும் 48 வயதுடைய ரஷ்யப் பிரஜையும் இரண்டு சீனப் பிரஜைகளுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜைகள் மூவரும் நாரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் வெளிநாட்டுப் பிரஜைகளை காப்பாற்றி முதலுதவி அளித்துள்ளனர்.