உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Today Gold Price: மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை! புலம்பும் பாமர மக்கள்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரங்களில் குறைந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்துள்ள நிலையில், இன்றும் சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,430 ஆகவும் சவரன், ரூ.51,440 ஆகவும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, 6,460 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 240 அதிகரித்து, 51 ஆயிரத்து 680 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதங்களில் 55 ஆயிரத்தை தாண்டி சென்ற தங்கத்தின் விலை தற்போது 51 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வருகின்றது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.