உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கடலுக்கு குளிக்க சென்ற வெளிநாட்டு பிரஜை திடீர் மரணம்!

பெந்தோட்டை கடலில் மூழ்கி கஸகஸ்தான் பிரஜை ஒருவர் நேற்று வியாழக்கிழமை (06) உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
63 வயதுடைய கஸகஸ்தான் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கஸகஸ்தான் பிரஜை நேற்றைய தினம் பெந்தோட்டை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதன்போது, பிரதேசவாசிகள் சிலர் இணைந்து காப்பாற்றி, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.