உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கணவரை நாயுடன் ஒப்பிடப்பிட்டதால் குற்ற உணர்ச்சியில் குறுகிய நயன்தாரா- அவரே கூறினாரா?

கணவரை நெட்டிசன்கள் நாய் என கூறுவதால் நயன்தாரா குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக நடித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.
பாலிவுட்டில் முதல் தடவையாக ஷாருக்கானுக்கு ஜோடியாக “ஜவான்” படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படம் ரூ.1140 கோடி வசூலை கொடுத்தது.
இதற்கிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாகவும் நயன்தாரா இருக்கிறார்.
தன்னுடைய 2 குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமான படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.
இந்த நிலையில், மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸிக் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியது.
இந்த ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நயன்தாரா முன்வைத்தார்.
எதிர்ப்புக்கு மீறி ஆவண படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய ஆவணப் படத்தில் விக்னேஷ் சிவன் தன்னை நாயுடன் ஒப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் அதில், “ஏன் அழகான பெண் ஒரு பீஸ்டை காதலிக்கக் கூடாதா? வாழ்க்கை மிகவும் எதிர்பாராதது. பஸ் கண்டக்டர் (நடத்துனர்) சூப்பர் ஸ்டார் ஆகுவதில்லையா? பெரிய இடத்துக்கு வருவது எதுவும் எளிமையாக நடப்பதில்லை” என பேசியிருந்தார்.
இது குறித்து பேசிய நயன்தாரா, “நான் ஒருவேளை விக்கி வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் அவர் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். சில நேரங்களில் இதுகுறித்து எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும்” எனக் கூறினார்.
இந்த கூற்றிற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து தனக்கு நயன்தாரா கிடைத்தது மிகப்பெரிய வரம் எனக் கூறினார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் படு பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.