உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கொழும்பில் உள்ள குறித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொழும்பில் உள்ள சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (16-01-2025) மாலை 6.00 மணி முதல் நாளை (17-01-2025) காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்கள் நேரம் நீர் விநியோகம், தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது.