உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்- நடிகை நித்யாமேனன் ஆதங்கம்

“ கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த படங்களில் நடிக்க மாட்டேன்” என நடிகை நித்யாமேனன் பேசிய ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகை நித்யா மேனன்.
இவர், நடிப்பில் வெளியான மெர்சல், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
அதிலும் குறிப்பாக தனுஷ் – நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றது.
இந்த நிலையில்,சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நித்யாமேனன் அவர் எப்படி படத்தை தேர்வு செய்கிறார் என்பதனை விளக்கமாக கூறியுள்ளார்.
அதாவது, “ நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம் அனைவருக்கு பிடிக்க வேண்டும். அதனை அனைவரும் விரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தெரிவு செய்ய மாட்டேன். நான் தெரிவு செய்யும் கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தால் மட்டுமே போதும்.
அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லையென்றால் அதை நான் ஏற்று நடிக்க மாட்டேன். அதே சமயம், சிறிய பட்ஜெட் படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் அந்த வாய்ப்பையும் விட மாட்டேன்..” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த கருத்துக்கள் நித்யாமேனன் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.