உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பிரபல வர்த்தகரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு; தீபாவளி தினத்தில் இடம்பெற்ற சம்பவம்

பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை மீகொடை, படவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது வீட்டிலிருந்த எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல வர்த்தகரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.