உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பில் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்.. பயணிகளுக்கு நேர்ந்த நிலை?
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் சென்றுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் ரயர் வெடித்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே இவ் விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.