உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பில் மாபெரும் கருத்தரங்கு

மலேசிய இலக்கியப் பயணக்குழுமம் மற்றும் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் இணைந்து மலேசிய – இலங்கை இலக்கியம் அறிமுகக் கருத்தரங்கை கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சிறப்பாக நடத்தின.
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சித் மூர்த்தியின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி கருத்தரங்கு மலேசிய இலக்கிய பயணக்குழுமத்தின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருரான இராஜேந்திரன் பெருமாளுடன் 36 மலேசிய இலக்கிய ஆளுமையாளர்களின் பங்குபற்றுதலோடு நடைபெற்றது.
பொது அரங்கத்தில் இராஜேந்திரன் பெருமாளால் கருத்தரங்கு குறித்த விளக்கவுரையாற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மூன்று அரங்கங்களில் கட்டுரையாளர்களால் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டு விளக்கங்கள் வழங்கப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழக மொழியியல் பீட பேராசிரியர் வானதி பகிரதன் அரங்கத் தலைவராகவும் திருமதி. மலர்க்கொடி சுப்ரமணியம் உதவியாளராகவும் செயற்பட்ட னர்.
தமிழவேள் ஆதி.குமணன் அரங்கத்தில் சபா.கணேசு , முனைவர் இராஜம் காளியப்பன், பாஸ்கரன் சுப்பிரமணியம், திருமதி. இராஜேஸ்வரி சின்னத்தம்பி ஆகிய மலேசியக் கட்டுரையாளர்களாலும்
திருமதி.ரூபி வலன்ரினா பிரான்சிஸ்,பேராசிரியர் சி.சந்திரசேகரம், முனைவர் முருகு தயாநிதி ஆகிய இலங்கை கட்டுரையாளர்களாலும் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.
சிவபாதசுந்தரம் சுதாகரன் அரங்கத்தலைவராகவும் சுதந்திரன் உதவியாளராகவும் செயற்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் அரங்கத்தில் திருமதி.மீனாட்சி சுந்தரி,கணேஷ் இராம் , நா.பச்சைபாலன்,திருமதி வனிதா இராமகிருஷ்ணன் ஆகிய மலேசியக்கட்டுரையாளர்களாலும் கலாநிதி அழகையா விமல்ராஜ்,அருட்பணி பெனடிக்ட் சவரிமுத்து , சு.தவச்செல்வன் ஆகிய இலங்கை கட்டுரையாளர்களாலும் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.
திருமதி.அசோகாம்பிகை யோகராஜா(மண்டூர் அசோகா) அரங்கத்தலைவராகவும் திருமதி.லதா ஈசரத்தினம் உதவியாளராகவும் செயற்பட்ட தமிழ் ஒளி வித்துவான் க.செபரத்தினம் அரங்கத்தில் திருமதி.சுபா சுப்பிரமணியம் , குமரி ரமீலா நந்தகுதார், குமரி சந்தியா சுந்தரராசு ஆகிய மலேசியக்கட்டுரையாளர்களாலும் கலாநிதி த.மேகராசா, அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் அடிகளார், திருமதி.சுதாகினி டெஸ்மன் ராகல், திருமதி.விஜிதா திவாகரன் ஆகிய இலங்கை கட்டுரையாளர்களாலும் கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இலங்கை – மலேசிய இலக்கிய கருத்தரங்கு நிறைவு விழாவில் நிகழ்வின் பிரதம அதிதியாக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இயக்குனர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி கலந்து சிறப்பித்தார்.
.நிகழ்வில் கலந்துகொண்ட மலேசிய இலக்கிய ஆளுமையாளர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்களின் இனிய இசை வாத்திய வரவேற்புடன் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன்போது சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் .செ.அமிர்தலிங்கம் , மலேசிய இலக்கிய பயணக்குழும கருத்தரங்கின் தலைவரும் ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் பெருமாள் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர். நிகழ்வில் மங்கலவிளக்கேற்றலைத்தொடர்ந்து மலேசியத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதோடு மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க செயற்குழு உறுப்பினர் கு.விநாயகமூர்த்தியால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து
அதனையடுத்து இராமகிருஷ்ண மிஷன் உதவிப் பொதுமுகாமையாளர் மத் சுவாமி உமாதீசானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கியதை தொடர்ந்து சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கு நூல் வெளியீடு இடம்பெற்றது.நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் க.சுரேஸின் சார்பாக .சதீஸ் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மலேசிய இலக்கிய பயணக்குழுமம் சார்பாக கலந்து சிறப்பித்த இலக்கிய ஆளுமையாளர்களை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து பெ.இராஜேந்திரனின் மந்திரக்கணங்கள் நூல் வெளியீட்டின் நோக்கவுரை நிகழ்த்தப்பட்டது.பின்னர் மந்திரக்கணங்கள் நூலிற்கான அறிமுகவுரையை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரான அ.அ.நவரெத்தினம் அடிகளாரால் ஆற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களால் மந்திரக்கணங்கள் நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.நூலின் முதற்பிரதியை பிரபலதொழிலதிபரும் சமாதானநீதவானுமான ந.ஜெகதீசன் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பாவலர் சாந்திமுஹைதீன் வாழ்த்துக்கவி பாடப்பட்டது.அதன்போது பாவலர் சாந்திமுஹைதீன் அவர்கள் மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.