உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மாமனாரை அடித்து துன்புறுத்திய உப பொலிஸ் பரிசோதகர்!

தனது மாமனாரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.