உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்பு

நுவரெலியா அக்கரப்பத்தனை – என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து நேற்றிரவு குறித்த சிசுவின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.