உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மயில வெட்டுவான் வீரகட்டு பகுதியில் யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மட்டக்களப்பு மயில வெட்டுவான் உப்போடை வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 50 வயது நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை குறித்த குடும்பஸ்தர் தனது 14 வயதுடைய மகனுடன் விறகு வெட்டுவதற்காக தோணியில் விரகட்டுமுனை பகுதிக்குச் சென்று விறகு வெட்டி வரும் வழியில் காட்டு யானை துரத்தி உள்ளது.
யானை தாக்குதலுக்கு பயந்து தந்தையும் மகனும் ஆற்றில் பாய்ந்துள்ளனர். மகன் நீந்தி ஆற்றை கடந்த நிலையில் தந்தை ஆற்றில் நீர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் பல மணி நேரம் ஆற்றில் தேடிய நிலையில் மாலை தந்தை வேளை சடலமாக மீட்கப்பட்டார். ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு முதற்கட்ட விசாரணையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல் கூறு பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலால் பலர் கொல்லப்பட்டதுடன் வேளாண்மை உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் உரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.