உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாண கடற்பகுதியில் பகுதியில் கைதான இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி!
எல்லை தாண்டி மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (12-11-2024) அதிகாலை கைது செய்யப்பட்டு மயிலிட்டி கடற்படை முகாமில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாண நீரியல் வளத்துறை மற்றும் கடத்றொழில் அமைச்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஊடாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே கைதான இந்திய மீனவர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.