உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விசேட சுற்றிவளைப்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கம்பஹா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (03) முற்பகல் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது அவர்களிடம் 5000 ரூபா 25 போலி நாணயத்தாள்களும் 90 போலி கொரிய நாணயத்தாள்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.