உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் இரத்து
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும் தாமதமாகலாம் எனவும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இன்று மாலை 6.35க்கு சென்னை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 123 என்ற விமானமும், இந்தியாவின் சென்னையிலிருந்து, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்படவிருந்த யு எல் 124 என்ற விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதுடில்லி, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.