உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
பாபா வங்காவின் பகீர் கணிப்பு ; 2043 இல் முஸ்லிம்களால் ஆளப்படும் நாடு எது தெரியுமா?

உலகப் புகழ் பெற்ற கண் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் கடந்த கால கணிப்புகள் பலவற்றும் தற்போது பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது அவரது ஒரு புதிய கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா தனது கணிப்பில், 2043 ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்கள் முழு ஐரோப்பாவையும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், 44 ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் 2025 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவின் மக்கள்தொகை கணிசமாக குறையும் என்றும் அவர் கணித்தார். எனினும், 2025 ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், இந்நிகழ்வு உண்மையாக வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. தற்போதைய நிலவரத்தில் ஐரோப்பாவில் மக்கள்தொகை நெருக்கடி எதுவும் இல்லையென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா, ஐரோப்பாவின் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை சந்திக்கலாம் என்றும், கிறிஸ்தவ ஆதிக்கம் கொண்ட ஐரோப்பா, இஸ்லாமிய ஆட்சிக்குள் மாறக்கூடும் என்றும் கணித்திருந்தார். இது, இரு சமூகங்களுக்கிடையில் கலாச்சாரப் போரை தூண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்திய ஆய்வுகளின்படி, அடுத்த 35 ஆண்டுகளில் உலகில் முஸ்லிம் மக்கள் தொகை 70% வரை அதிகரித்து, 2060ஆம் ஆண்டுக்குள் இஸ்லாம் உலகின் மிகப்பெரிய மதமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவும் நேபாளமும் தொடர்ந்து இந்து மக்கள் அதிகமுள்ள நாடுகளாக உள்ளன. பாபா வங்கா, ஐரோப்பாவை பற்றிய கணிப்புகள் வழங்கினாலும், இந்தியா அல்லது நேபாளம் போன்ற ஆசிய நாடுகளை பற்றிய இவ்வகை எதிர்கால கணிப்புகள் எதுவும் வழங்கவில்லை.