உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு

கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இன்று (12.05.2025) அன்று விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. “தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளமை, உலகத் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
இந்த நினைவுத்தூபி, கனடா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுத்தூபி அழிக்கப்பட்ட பின்னர், அதன் இடமாற்று வடிவமாக இதுவமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, “இது எங்கள் கூட்டு வரலாற்றில் மிக முக்கியமான தருணமாகும். நினைவுகளையும் நீதி முயற்சிகளையும் சர்வதேச அரங்கில் நிலைநாட்டும் ஒரு அடையாளமாக இந்த தூபி அமையும்” எனக் கூறினார்.
இந்நாள் அன்னையர் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டை உலுக்கிய முள்ளிவாய்க்கால் நிகழ்வில், தாய்மையின் வலிமையும் தியாகமும் உலகத் தமிழர்கள் மனங்களில் நிறைந்திருக்கும் ஒரு நினைவாக இந்நாள் அமைந்துள்ளது.
இந்த நினைவுத்தூபி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று உணர்வுக்கும் நீதி தேடலுக்குமான ஒட்டுமொத்த அடையாளமாகக் கருதப்படுகிறது.