உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
கனடா தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள்; அதிர்ச்சியில் தமிழர்கள்!

கனடா, Ontario மாகாணத்தில் உள்ள Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Brampton நகரில் அமைந்துள்ள Chinguacousy பூங்காவில் மே 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இந்த நினைவகம், இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் நோக்கில் நிறுவப்பட்டதாகும்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (27) நள்ளிரவுக்கு பின்னர், முகமூடி அணிந்த இனந்தெரியாத நபர்கள் நினைவகத்தை சேதப்படுத்தியுள்ளதாக கண்காணிப்பு கமேராக்களில் பதிவாகியுள்ளது எனவும், சம்பவம் தொடர்பில் Peel பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வால் கனடாவில் வாழும் தமிழ் மக்கள் பெரும் மனவேதனையிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். தமிழின அழிப்பை உலகிற்கு நினைவூட்டும் இந்த நினைவகத்தை இலங்கை வெளியிலேயே முதன்முறையாக அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.