உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் பிறந்து 5 மாதங்களேயான குழந்தை பலி; துயரத்தில் பெற்றோர்

உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 5 மாதங்கள் பிறந்த தரின் பவிசா என்ற பெண் குழந்தை, காய்ச்சல் காரணமாக நேற்று (22) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
திங்கட்கிழமை (21) முதல் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முதலில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் காய்ச்சல் குறையாததால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை குழந்தை உயிரிழந்தது.
சடலத்திற்கு திடீர் மரண விசாரணை நடத்தியுள்ளார் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்.உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.