உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை பூமியை கடக்கும் மிகப்பெரிய கோள்; விஞ்ஞானிகள் அச்சம்!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, பூமிக்கு நெருக்கமாக மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடந்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது. 387746 (2003 MH4) எனப்படும் இந்த விண்வெளிப் பாறை, அதன் அதிக பருமனும், பூமிக்கு நெருங்கிய பயணப்பாதையும் காரணமாக “சாத்தியமான அபாயகரமான சிறுகோள்” (Potentially Hazardous Asteroid – PHA) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுகோள், 2025 மே 24 ஆம் திகதி, மாலை 4:07 (இந்திய நேரம்) பூமியின் அருகே 6.67 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பயணிக்க இருக்கிறது. இது பூமி-சந்திரன் இடையிலான தூரத்தை விட 17 மடங்கு அதிகமானது.
சிறுகோள்: அகலம்: 1,100 அடி (சுமார் 335 மீ), வேகம்: 30,060 கிமீ/மணி, நிகழ்வும்: மே 24, 2025 – 4:07 PM IST
இது பூமியை நேரடியாக தாக்காது என்பதை நாசா உறுதியாக தெரிவித்துள்ளது. எனினும், இது போன்ற PHA வகை சிறுகோள்கள், பாதை மாறக்கூடிய தன்மையால் கண்காணிப்பு அவசியம் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
2003 MH4 போன்ற ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அணு குண்டுகளுக்குச் சமமான வெடிச் சக்தி வெளிப்படும். மெகா-சுனாமிகள், பூகம்பங்கள், காட்டுத்தீகள் உருவாகும். வளிமண்டலத்தில் தூசி விரிவடைந்து, சூரிய ஒளி மறைந்து, காலநிலை மாற்றங்கள் ஏற்படலாம்
நாசா மற்றும் பிற வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய PHA கோள்களை NEOWISE, Sentry, DART போன்ற திட்டங்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கு எவ்வித அச்சமோ பதற்றமோ ஏற்படத் தேவையில்லை.இது வானியல் ரீதியாக ஒரு முக்கிய நிகழ்வாகும்.வானத்தில் நேரடியாக காண முடியாது என்றாலும், வலைதளங்கள், துருவ வானியல் கண்காணிப்பு நிலையங்கள் மூலம் தகவல்களைப் பெறலாம்
இந்த சிறுகோள் பூமிக்கு நேரடியாக தாக்கப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் நம்மை விண்வெளியில் ஏற்படும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டுகின்றன. வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு சுவாரசிய நிகழ்வாக இருக்கும்.