உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு த. வெ. க தலைவர் விஜய் வௌியிட்ட பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையொட்டி, தமிழ் மக்கள் மரணமின்றி மறக்க முடியாத நாளை நினைவுகூரும் தருணத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், தனது சமூக வலைத்தளமான எக்ஸ் (முன்னைய ட்விட்டர்)-இல் மனம் தொட்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்விழாவில், தமிழர்களின் துயரத்தையும், வீரத்தையும் போற்றும் வகையில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்” என்றும் பதிவில் எழுதியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் எனப்படும் இடம், இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போர் தொடர்களில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்த இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக நினைவேந்தல் தினமாக அனுசரிக்கின்றனர்.
வெகுசனப்படுகொலைக்குப் பிறகும் தொடரும் துயர மரணங்களைப் பற்றிய விழிப்புணர்வையும், தமிழர் உரிமைகளுக்கான வலியுறுத்தலையும் கொண்டு இந்த நாளை அனுசரிக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் வெளியிட்ட உருக்கமான பதிவு, பலரின் மனங்களை தொட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் குறித்த பதிவு விரைவாக பரவி வருகின்றது. தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்களும், ரசிகர்களும் விஜய்க்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.