உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
சரிகமப மேடையில் சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான்; சோக கதை கேட்டு கண்கலங்கிய அரங்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் 5-ன் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத் தமிழர் பிரஷான் பங்கேற்றிருப்பது முக்கிய சிறப்பாகும்.
இலங்கை பூர்வீகமாக கொண்ட பிரஷான், கடந்த 10 ஆண்டுகளாக அகதியாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இவரது குடும்பம், பல ஆண்டுகளாக அந்நாட்டில் வசித்தாலும், இன்று வரை எந்தவொரு நாட்டின் குடியுரிமையும் பெறாத நிலையில் உள்ளது.
இந்நிலையில், 30 நாட்கள் செல்லுத் தனிச்சிறப்புக் விசாவில் இந்தியா வந்த பிரஷான், சரிகமப மேடையில் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தி, மிரட்டியுள்ளார். தனது உணர்வுப் பூர்வமான பாடலின் மூலம் அரங்கில் இருந்தவர்களின் இதயத்தையும், நடுவர்களின் மனதையும் உருக்க வைத்தார். இதில் நேரடியாக ‘கோல்டன் வெற்றி’ எனப்படும் சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
“எனக்குத் தெரிந்தது இசை மட்டும்தான்… என் மனதில் ஏற்படும் கஷ்டங்களை எல்லாம் பாடலின் வழியாக வெளிக்கொணர்வதுதான் என் வழி,” என பரவசத்துடன் தெரிவித்த பிரஷான், கடந்த ஆண்டும் நிகழ்ச்சியில் தேர்வு ஆனாலும் விசா பிரச்சினையால் பங்கேற்க முடியவில்லை என்றார். இந்த ஆண்டும் ஜூன் 3க்குள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கண்கலங்க கூறியார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வந்த டி. ராஜேந்தர், பிரஷானின் கதையை கேட்டு கண்கலங்கி, அவரை கட்டியணைத்து, “வாழ்க்கையுடைய நிலைமையை பார்க்கும்போது மனசு ரொம்ப பாரமாகிறது. ஆனால் ஒவ்வொரு நாளுக்கும் கடவுள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். அதைக் கடக்க முடியாது. ஜூன் 3ஆம் தேதி நீ புறப்பட வேண்டியிருந்தாலும், இந்த சரிகமபவின் சங்கீதக் குடும்பம் உன்னை என்றும் நினைவில் வைத்திருக்கும்,” எனத் தெரிவித்தார்.
“உனக்குன்னு ஒரு அடையாளம் இல்லை என்று நினைக்காதே. இனிமேல் ‘இசை கலைஞர்’ என்பதுதான் உன்னுடைய அடையாளம். இந்த மேடை உனக்காகவே ஒரு அடையாளமாக இருக்கும்,” என டி. ராஜேந்தர் உட்பட அனைத்து நடுவர்களும் பிரஷானை வாழ்த்தினர்.
பிரஷானின் இசைத் திறமை மற்றும் வாழ்க்கைப் பயணத்தின் பின்னணி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதனைகளுக்கு எல்லை இல்லையென நிரூபிக்கும் வகையில், பிரஷான் ஒரு ஈழத் தமிழராக உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.