உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தாய் – தந்தை வீட்டில் இருந்தபோதும் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

காலி மாவட்டம் கரந்தெனிய – மஹகொட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தாயும் தந்தையும் வீட்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவன் வீட்டில் இல்லாததால், பெற்றோர்கள் நடத்திய தேடுதலின்போது, அருகில் உள்ள நிலத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் அவர் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.
சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.