உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியிலிருந்து மாயமான பெருந்தொகை பணம் போலீசார் விசாரணை!

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு நேற்று(11.04.2023) பிற்பகல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அவர்கள் மேலும் ஒருமுறை பணம் காணாமல் போனது தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.