உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மட்டகளப்பில் 12 மணித்தியாலத்தில் 3 பேரின் விபரீத முடிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் இன்று (16) ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண், பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அண்மைகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.