உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மஹிந்தவிற்கு டாடா சொல்லி சஜித்துடன் இணையும் முக்கிய எம்.பிகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடுத்த வாரங்களில் அவர்கள் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரியதர்சன யாப்பா,சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே, ஜோன் செனவிரத்ன மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகியோரே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.