உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த சோகம்!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (23-07-2023) இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் கந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான தாமோதரம்பிள்ளை நவரத்தினராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.