உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
திருகோணமலையில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் பலி

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரக்கட்டையில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில் தோப்பூர், 7 ஆம் வட்டாரம், இக்பால் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் முஹம்மது அன்சார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.