உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தென் கடற்பரப்பில் போதைப்பொருளுடன் 11 பேர் கைது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் ஹெரோயினுடன் பிடிபட்ட 11 சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென் கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் 11 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீன்பிடி படகுகளில் 65 கிலோ 76 கிராம் போதைப்பொருள் காணப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்களை கடற்படையினர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.