உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்

திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு, குறைபாடுகள் இனங்காணப்பட்ட உணவகங்களிற்கு, திருத்த வேலைகளிற்கான அறிவுறுத்தல்கள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு கால அவகாசமும் உணவகங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அதனை செயற்படுத்தாத மூன்று உணவகங்களிற்கும் மொத்தமாக 275,000/= தண்டம் அறவிடப்பட்டதுடன், மூன்று உணவகங்களையும் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை இட்டார்.