உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மின்சாரம் தாக்கி பெண் பலி

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பிகளில் சிக்கியதில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.