உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
தொல்பொருட்களை கொள்ளையிட்ட பூசாரிகள்!
தங்காலை பகுதியில் பூசாரிகளை போல் நடித்து பல்வேறு தொல்பொருட்களை எடுத்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து கஜமுத்து, 10 மாணிக்க கற்கள் மற்றும் 262 பழைய நாணயங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிள், பூசாரிகளைப் போன்று உடை அணிந்திருந்த இருவரும் காலி நெலுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றையவர் காலி நாகொடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான மூவரும் 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.