உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்திற்கு ஏலம் போன அரிய மாம்பழம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று(24.08.2024) நடைபெற்றுள்ளது.
மாம்பழத்திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
இதன்போது, பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 7 இலட்சம் வரை சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.