உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
மனைவியுடன் வந்து வாக்களித்தார் நாமல் ராஜபக்ஷ !

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.
இந்நிலையில் வாக்களிப்பதற்காக இன்று (21) காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்தார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.