உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அவமானத்துடன் வெளியேறிய அர்னவ்- உள்ளே மனைவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பலத்த அவமானத்துடன் வெளியேற்றப்பட்ட அர்னவிற்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கப்போகின்றது என பயந்த போது விஜய் சேதுபதி கமல்ஹாசனை விட பிக்பாஸை கலகலப்பாக கொண்டு செல்கிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 2 ஆவது வாரத்திற்கான தலைவராக சத்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 ல் முக்கிய போட்டியாளராக இருந்த அர்னவ் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இரண்டாவது வாரத்தில் மிகக்குறைவான வாக்குக்களை பெற்று அர்னவ் வெளியேறியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஏனெனின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அர்னவ், பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு விஜய் சேதுபதி தக்க பதிலடிக் கொடுத்துள்ளார். அத்துடன் அர்னவிற்கு பதிலாக அவரின் முன்னாள் மனைவி திவ்யா பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். இனி வரும் எபிசோட்கள் எப்படி இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இரண்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட அர்னவிற்கு ஒரு நாளைக்கு 20 – 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. மொத்தமாக இரண்டு வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தமைக்காக 2.8 -3.5 லட்சம் வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.