உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஐந்து ஆண்டுகளின் பின் இலங்கையை ஆட்சி செய்யப்போவது நாமே ; நாமல் ராஜபக்க்ஷ!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசு இன்னும் ஐந்து வருடங்களுக்குத் தொடர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவ்வாறு அல்லாவிட்டால் நாடு சவால்களை சந்திக்க நேரிடும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை விடவும் மொட்டுக் கட்சிக்குரிய வாக்கு வங்கி தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும் எனவும், கட்சியை மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கை இடம்பெறும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியை மீண்டும் பிடிப்பதே எமது இலக்காகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.