உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு… மனைவிக்கு சாதகமாக வந்த நீதிமன்ற உத்தரவு
நடிகர் ஜெயம் ரவி மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இன்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 2009ம் ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்யவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், ஜெயம் ரவி நேரில் வந்து ஆஜராகியுள்ளார்.
அவரது மனைவி ஆர்த்தி காணொளி மூலம் ஆஜராகிய நிலையில், இருவருக்கும் இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டதுடன், அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பான விபரங்களையும் தாக்க செய்யவும் கூறியுள்ளார்