உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
விவசாயிகளுக்கான உர மானியம் வழங்குவதில் தாமதம்

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய அமைச்சு,
இது தொடர்பான அறிக்கையை விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிடுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது